பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
Pollachi case judgement
2019-ஆம் ஆண்டு பெரும் அதிர்வலை கிளப்பிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரம் இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், கல்லூரி மாணவி உட்பட பல பெண்களிடம் பழகி திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர்.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடியுக்கும், பிறகு சிபிஐக்கும் மாற்றப்பட்டது. சிபிஐ, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
வழக்கின் சாட்சி விசாரணை 2023 பிப்ரவரியில் தொடங்கி, ஆன்லைன் மூலமாக முப்பெரும் பாதுகாப்புடன் நடைபெறப்பட்டது. இறுதி வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு வழங்கினார்.