காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு: தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு சி.பி.சி.ஐ.டி நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


சென்னை, வேப்பேரி காவல் நிலையத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு அதன் சுற்றுச்சுவர் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கோவை பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே இந்த வழக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இருப்பினும் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக 10 முறை பிடிவாரண்ட் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து அஷ்ரப் அலியை நீதிமன்றம் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. 

அடுத்த மாதம் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளி தேடி இன்று கோவைக்கு சென்றனர். 

பின்னர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நோட்டீசை வீட்டில் சுவற்றில் ஒட்டி விட்டு அருகே இருந்த அவரது தங்கை வீட்டிற்கு போலீசார் சென்று அஷ்ரப் அலி குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நோட்டீசை வழங்கி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police station bomb case CBCID notice absconding criminal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->