த.வெ.க தலைவர் விஜயை பார்க்கச் சென்ற போலீசார் இடைநீக்கம்.!!
police officer suspend for see tvk leader vijay in madurai
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயை பார்ப்பதற்காகச் சென்ற காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசாராக பணிபுரிந்து வந்த கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப்பணியில் இருந்தார்.
இந்த நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் மதுரைக்கு வந்து இருந்தார்.
அப்போது காவலர் கதிரவன் மார்க்ஸ் த.வெ.க. தலைவர் விஜயை பார்ப்பதற்காக வேறு காரணம் கூறி, முன் அனுமதி கேட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும், அவர் சீருடை இல்லாமல், த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்த வீடியோ மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனுடைய பார்வைக்கு சென்றதையடுத்து, காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளர்.
English Summary
police officer suspend for see tvk leader vijay in madurai