#கோவை || அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை..!
Police investigation Driver death
ஓட்டுநர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர் சேகர். இவர் அங்குள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணேசன் வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அவரின் இறப்பு நேரிடலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Police investigation Driver death