கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை..!! விசாரணை நடத்தி வரும் காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த மாமியார் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தூத்துகுடி மாவட்டம், காயல் பட்டிணத்தை சேர்ந்தவர் பொன்மாரி(30). இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இருவரும் நெல்லையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக வரதட்சணை கேட்டு பொன்மாரியை தொல்லை செய்து வந்துள்ளார்.

கணவரின் சித்திரவதை தாங்காமல் பொன்மாரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து பொன்மாரி வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக கணவன் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about dowry issue


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal