கரூர் துயர சம்பவம்: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் உண்மைத்தன்மை: காவல்துறை ஆராய்வு..! - Seithipunal
Seithipunal


கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், இளம்பெண்களும் அடங்கலாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, கரூர் துயரச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை ஆராயும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

02-வது நாளாக விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக காவல்துறையினரும் தங்களின் விசாரணை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி..? கூட்டத்தினரை யாரேனும் திசை திருப்பி விட்டனரா..? என்பது பற்றிய புலன் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, சம்பவத்தின் போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

இந்த வீடியோக்களில் உள்ள காட்சிகள், வெளியிடப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைதானா? மற்றும் அவற்றை வெளியிட்டவர்கள் யார்..? இவை ஏதேனும் உள்நோக்கத்துடன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டனவா..? என்பதை கண்டறிய விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணையில், தேவைப்பட்டால் அந்த வீடியோக்களை வெளியிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கரூர் சம்பவம் குறித்து எந்த வகையிலும் மக்கள் வதந்தி பரப்பக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigating the veracity of videos posted on social media regarding the Karur tragedy


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->