குற்றாலத்தில் குவிக்கப்பட்ட போலீசார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


குற்றாலத்தில் குவிக்கப்பட்ட போலீசார் - நடந்தது என்ன?

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்றடி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவர் கேரளாவிலிருந்து பழங்கள் கொண்டு வந்து, மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே சுடலை உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், சுடலை இன்று சுடலை மாடன் கோவில் அருகே உள்ள தோப்பு பகுதிக்கு சென்று விட்டு, ஒருமரத்தின் அடியில் அமர்ந்துள்ளார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுடலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police guard in kutralam for man murder issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->