ராசிபுரம் 'சங்கி பிரின்ஸ்' தலைமறைவு! போலீஸ் வலைவீசி! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தினைச் சேர்ந்த பிரவின்ராஜ் என்பவர். என்ற சங்கி பிரின்ஸ் என்ற பெயரில் எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில்,  பிரவின்ராஜ் தந்து SanghiPrince (@Sanghi Prince) பக்கத்தில் கடந்த 13.12.2023-ஆம் தேதி #SecurityBranch happened in Loksabha you know why? Becuse of the irresponsible MPs like you were distributing Visitor passes via social media for publicity and without background verification. Take responsibility on this blame. @DrSenthil MDRD என்று தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் S.செந்தில்குமார் என்பவரை பற்றி அவரது புகைப்படத்தை போட்டு, அதில் பிரவீன்ராஜ் என்பவர் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த திருச்சி மாவட்டம், ஆரோக்கியதாஸ் (வழக்கறிஞர்), "தற்போதைய மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில் குமார் என்பவருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பதிவிட்டுள்ளதாகவும், இந்த செய்தியானது அரசுக்கு எதிராகவும், உண்மைக்கு மாறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதியினை கெடுக்கும் நோக்கத்துடனும், உண்மைக்கு புறம்பான செய்தியினை சமூக வலைதளங்களில் பரப்பிய பிரவீன்ராஜ் மீது கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண். 33/23 ச.பி. 504, 505(1)(b) IPC & 66 IT Act ன்படி வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள எதிரியை திருச்சி மாவட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Case file against Rasipuram Sangi Prince


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->