திருமணம் செய்த ஒரே நாளில் மாயமான மணமகள்., மோசடி கும்பலை கைது செய்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


போலி திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் திருமணம் செய்வதற்காக பல ஆண்டுகளாக வரன் தேடி வந்தனர். ஆனால் சரியான வரன் அமையவில்லை.

இந்நிலையில், ராஜேந்திரனுக்கு தோட்டத்துபாளையத்தை சேர்ந்த  அம்பிகா  அவரது தோழி அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரும் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள், ரீசா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ராஜேந்திரனுக்கு பெண்ணை பிடித்து விட்டதால் உடனே திருமணம்  செய்ய கடந்த மாதம் 22ம் தேதி ரீசாவை நிச்சயம் செய்துள்ளார்.

இதனை அடுத்து,  24 தேதி திருமணம் செய்துள்ளார்.திருமணம் முடிந்து தரகு கமிஷனாக ரூபாய் 1லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார்.மறுநாள் ராஜேந்திரன் வெளியில்  சென்றிருந்த நேரம் ரீசா நகைளுடன் மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தரகர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியாக பதில் கூறவில்லை.

 இதனை அடுத்து, ராஜேந்திரன் அரியலூரில் சென்ற விசாரித்த போது தான் ரீசாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்கள் ஐவரையும் கைது செய்தனர். அவர்களிடம் வேறு எங்கும் இது போன்ற மோசடியில் ஈடுப்பட்டார்களா எனவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest fraud gang


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->