சென்னை வளசரவாக்கத்தில் அதிர்ச்சி; 08-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலா...? பள்ளி ஆசிரியரிடம் மகளிர் போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று, 08-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியின் பின்புறம், வகுப்பு ஆசிரியர் கையால் அடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த மாணவி 'எதற்காக அடித்தீர்கள்' கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் 'எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அடித்தேன்' என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, ஆசிரியர் நடந்துகொண்ட செயல் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளனர்.

ஆனால், அவர்களிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are questioning a school teacher who sexually harassed an 8th grade student in Valasaravakkam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->