ஏற்காடு செல்ல "இனி புது ரூல்ஸ்".. காவல்துறை அதிரடி - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மாலை நடைபெற்ற தனியார் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அனுபவம் மிக்க ஓட்டுனர்கள் மட்டுமே ஏற்காடும் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

ஏற்காடு மலையின் அடிவாரத்தில் சோதனை சாவடி அமைத்து வட்டார போக்குவரத்து துறை மூலம் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், மலைப்பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை புரிவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police announced Now New Rules for drivers to go to Yercaud


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->