எத்தனை வழக்குகள் வந்தாலும், சமூக நீதி பேரவை உடைத்திடும் - பாமக வழக்கறிஞர் கே.பாலு.! - Seithipunal
Seithipunal


வழக்கு யார் போட்டாலும் அதை வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை உடைத்திடும் என கே.பாலு தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது பாமகவின் 40 வருட போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட செய்தியை அறிந்த வன்னிய மக்கள், தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றியை மனமார தெரிவித்தனர்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞரின் சமூகமான இசை வேளாளர் பேரவை சார்பாகவும், பிற சமுதாயம் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், திருச்சி திமுக சார்பாக இசை வேளாளர் பேரவை கூட்டம் நடைபெற்ற பின்னர், முதலில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தென்னாட்டு மக்கள் கட்சியின் தலைவர் கணேசத்தேவர் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், எத்தனை வழக்குகள் வந்தாலும், அதனை பாட்டாளி மக்கள் கட்சி உடைத்தெறியும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது முகநூல் பதிவில், " வழக்கு யார் போட்டாலும் அதை வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை உடைத்திடும் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Lawyer K Balu Facebook Post about Facing of Vanniyar Reservation Against Appeal on Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal