பாமக மாவட்ட செயலாளர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்..பாமகவினர் சாலை மறியல்.!! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டார். வருகின்ற 13-ஆம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து  வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி வாங்க காவல்நிலையம் சென்றுள்ளார் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி.

கார்  பெரும்பாக்கம் பகுதியில் செல்லும்போது , திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டுள்ளனர்.  பாமக கோடியுடன் வந்த விழுப்புரம் மத்திய மாவட்ட சேலையாளர் பாலசக்தி  கார் மீது திமுகவினர் நாட்டு பட்டாசுகளை தூக்கி வீசியாத கூறப்படுகிறது.

பட்டாசு வீசிய திமுகவினர்கள் கைது செய்ய கோரி  பாமக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கபட்டது. பின்னர், இதனை வழக்காக பதிவு செய்த போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னரே பாமகவினர் கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk district secaretary dmk murderous attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->