பாமக வேட்பாளரின் சின்னம் இல்லாத சீட்டு.. குன்றத்தூர் அருகே வாக்குப்பதிவு நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


பாமக வேட்பாளரின் மாம்பழம் சின்னம் வாக்குப்பதிவு சீட்டில் இல்லாததால், தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான இடைத்தேர்தல், தமிழகத்தில் அக். 6 & 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இன்று இரண்டாம்கட்டமாக 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் 173 ஆவது வார்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. குன்றத்தூர் பூந்தண்டலம் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு சீட்டில் குன்றத்தூர் ஒன்றியம் என வர வேண்டும். 

ஆனால், அந்த வாக்குப்பதிவு சீட்டில் காஞ்சிபுரம் ஒன்றியம் என அச்சிடப்பட்டு சீட்டுகள் இருந்துள்ளது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாமக வேட்பாளர் களமிறக்கப்பட்ட நிலையில், அவரது கட்சியின் மாம்பழம் சின்னம் இல்லை. மற்றொரு சின்னம் இருந்துள்ளது.

இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடவே, அவர்கள் தேர்தலை நிறுத்தியுள்ளனர். மேலும், இன்று நேரம் ஆகிவிட்டதால், இதற்கு மேல் மறுவாக்குசீட்டுகள் கொண்டு வர வாய்ப்பில்லை என்பதால், 12 ஆவது வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவித்துள்ளனர்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Candidate Local Body Election Vote List Correction Kundrathur Area Vote Post pend Tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->