ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
PM Modi to participate in RSS centenary celebrations
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 02) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை டில்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். 1925-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நாளையுடன் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அக்டோபர் 01-இல் டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
அவ்விழாவில், ஆர்எஸ்எஸ்எமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி உரையாற்றுவார். என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, நேற்று 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
PM Modi to participate in RSS centenary celebrations