ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது - மோடி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று நெல்லை வந்துள்ளார். பின்னர் அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது. போதைப்பொருள் விற்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து புதிய வரலாறு படைக்க தமிழ்நாடு தயாராக உள்ளது. உங்கள் கனவுகளே எங்கள் நோக்கங்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi speech in tirunelveli election campaighn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->