மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை - தொல்லியல் துறை அறிவிப்பு.!
Picnicers not allowed in mamallapuram on February 1
ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
அதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Picnicers not allowed in mamallapuram on February 1