தேர்தல் நடத்தை விதியை மீறியதாக உதயநிதி மீது புகார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- "சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மைதான். 

அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் அடுத்த 4 மாதங்களில் உரிமை தொகை கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி கூறுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அ.தி.மு.க. தரப்பில் தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகாரை அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை தலைமையிலான வக்கீல்கள் குழுவினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petition against minister uthayanithi stalin


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->