பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்: பெற்றோருக்கு முதல்வர் விஜய் குறுஞ்செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்தையும் கல்வி ஆர்வத்தையும் உயர்த்தும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளி காலை உணவுத் திட்டம், தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இனி சுவையான காலை உணவு வழங்கப்படவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கத் திட்டம் குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேரடியாகக் குறுஞ்செய்தி (SMS) மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அந்த குறுஞ்செய்தியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் நாள்தோறும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து, எவ்விதப் பசியுமின்றி சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக, 2026 செப்டம்பர் 22 (செவ்வாய்க்கிழமை) முதல் இச்சத்தான காலை உணவுத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக இத்திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்ட விரிவாக்கத்தின் தொடக்க நாளில் மாணவர்களுக்குச் சுடச்சுட வெண்பொங்கல், சக்கரை பொங்கல் மற்றும் சாம்பார் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைவதோடு, பள்ளி இடைநிற்றல் முற்றிலும் குறைக்கப்பட்டு மாணவர்களின் சேர்க்கையும் வருகைப் பதிவும் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perunthalaivar Kamarajar Breakfast Scheme Expanded to Classes 6 to 8 CM Vijay Informs Parents via SMS


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->