மணிமுத்தாறு அருவியில் 10 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி! - Seithipunal
Seithipunal


முத்தாறு அருவியில்  10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது .குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.

இதனால் அம்பாசமுத்திரம்  மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.

மழை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மழை குறைந்துள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில்  10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைத்தாலும்  மாஞ்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Permission to bathe in Manimutharu River after 10 days


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->