பெரம்பலூர்: பஞ்சு மில்லில் கொடூர தீ விபத்து.! எத்தணை கோடி சேதம்.?!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் என்பவருக்கு சொந்தமாக பஞ்சு மில் ஒன்று இருந்துள்ளது. இங்கே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்ற பருத்தியை அரவை செய்து பஞ்சை மட்டும் தனியாக பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். 

இத்தகைய சூழலில், நேற்று காலை வழக்கம் போல அந்த பஞ்சு மில்லில் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்த போது திடிரென மில்லில், தீ பிடித்ததால் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். 

உடனே தீ வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் ரூ.2 கோடி இருக்கும் பருத்தி மற்றும் பஞ்சு அனைத்தயும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் கேட்ட வேப்பூர், பெரம்பலூர், ஸ்ரீரங்கம் பகுதியிலிருந்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முற்பட்டனர். 

5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதுகுறித்து பாடாலூர் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து தீப்பிடிக்க என்ன காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur padalur fire accident on cotton mill


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal