அட்டூழியத்தில் ஈடுபட்ட திமுக உடன்பிறப்புகள்.. ஓடவிட்ட பெரம்பலூர் பாமக..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பாக பல்வேறு வியூகங்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுகவில் பல மூத்த தலைவர்கள் இருக்கையில், திரைத்துறையில் திட்டமிட்டு மக்கள் மத்தியில் களமிறக்கப்பட்ட உதயநிதியை வைத்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே உதயநிதி பிரச்சாரம் மேற்கொள்ளையில், மேடையில் உள்ள மூப்பனாரின் பெயரை அகற்றினால் தான் மேடை ஏறுவேன் என்று கூறி அகற்றவைத்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து, தங்களின் ஆதங்கத்தை நடுசாலையில் உதயநிதியின் வாகனத்தை இடைநிறுத்தி வெளியேற்றினர். 

இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உதயநிதி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக கழக உடன்பிறப்புகள், அங்கிருந்த பாமக கொடியை, பாமகவினர் இல்லாதபோது அகற்றிவிட்டு, கலகம் ஏற்படுத்தும் பொருட்டு மேடையை அமைத்துள்ளனர். மேலும், இங்குள்ள அம்பேத்கார் சிலை, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு அவர்களால் நிறுவப்பட்டது. 

இது குறித்து தகவலை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், ஆவேசத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திமுக சார்பில் போடப்பட்டு இருந்த மேடையை உடன்பிறப்புகள் முன்னிலையிலேயே அகற்றி ஓரமாக வைத்துவிட்டு, பாமக கொடிக்கம்பத்தை நிலைநிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து இந்த விஷயம் தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார் மனுவை ஏற்ற காவல் ஆய்வாளர், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur DMK Party Supporters make a Cold Clash to PMK


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->