நாமக்கல்லில் பரபரப்பு...டெண்டர் நடைபெறும் பொழுதே டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓட்டம்..!!
people run with the tender quotation box in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்ட டெண்டர் பெட்டியை மர்ம நபர்கள் சிலர் தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வாடகை லாரிகள் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்த ஏலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பரமத்தியில் உள்ள சங்க அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பம் போடுவதற்கான பெட்டி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதால் தாமதமாக வைக்கப்பட்டது.
இதில் நாமக்கல் பகுதிக்கான பெட்டியில் சிலர் தங்கள் விண்ணப்பத்தை மட்டும் போட்டுவிட்டு வேறு யாரும் போடாமல் இருக்க விண்ணப்ப பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர்.

அவர்களை அரசு அதிகாரிகள் தடுக்கவில்லை எனவும் டெண்டரில் பங்கேற்க ஒரு சிலரை மட்டுமே அனுமதித்ததாகவும் மற்ற ஒப்பந்ததாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆய்வாளர் சங்கரபாண்டி பேச்சுவார்த்தை நடத்திய இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து டெண்டர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெண்டர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது டெண்டர் பெட்டியை தூக்கிச் சென்ற சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
people run with the tender quotation box in namakkal