திமுக அமைச்சர்களை சுத்து போட்ட பொதுமக்கள்..!! செங்கல்பட்டில் பெரும் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தின் பேருந்து நிலையம் ஜிம்மராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு செங்கல்பட்டு நகர் பகுதிக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்தை புறநகர் பகுதியான நேதாஜி நகரில் மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செங்கல்பட்டு பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கண்காணிக்க உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்காக நேதாஜி நகர் பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த இடத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் த.மோ அன்பரசன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர். அப்பொழுது நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் த.மோ அன்பரசனை முற்றுகையிட்டு தங்கள் வீடுகளை பேருந்து நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தக் கூடாது எனவும், பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி நகர் மக்களிடம் வீடுகளை இழக்கும் அனைவருக்கும் மாற்று இடம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.  இதனை ஏற்க மறுத்து நேதாஜி நகர் மக்கள் திடீரென செங்கல்பட்டு திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People besieged Minister Sekarbabu and Anbarasan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->