பெருமிதம்! காமராசர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை...! - சிதம்பரத்தில் முதலமைச்சர்
Paying homage to Kamarajs portrait by showering flowers Chief Minister in Chidambaram
சிதம்பரத்திற்கு நேற்று ரெயில் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்தார். அப்போது, அவருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்திலிருந்து கீழரதவீதியிலுள்ள தனியார் விடுதி வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அதன் பின்னர் அவர் கீழரதவீதியிலுள்ள தனியார் வீடுதியில் தங்கினார்.இதில் இன்று காலை அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ரெயிலடி திடலிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.
அங்கு காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது,அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
English Summary
Paying homage to Kamarajs portrait by showering flowers Chief Minister in Chidambaram