பயணிகள் உஷார்! கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து...!- தெற்கு ரெயில்வே - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே மின்சார ரெயில்கள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டதாவது,"சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.ஆகையால், ரெயிலில் பயணிக்கும் பயணிகள் நேரம் அறிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passengers beware Electric trains to Gummidipoondi cancelled Southern Railway


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->