ரெயிலில் சிக்கிய பயணிகள் - மீட்புப்பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு திருசெந்தூரில் இருந்து சென்னையை நோக்கி 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஆனால், இந்த ரெயில் தொடர் கனமழை காரணமாக பயணத்தைத் தொடர முடியாமல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதையறிந்த ரெயில்வே நிர்வாகம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள அனைத்து பயணிகளையும் மீட்கும் முயற்சியை  தொடங்கியது.

அதன் படி, நேற்று இரவு முதல் அங்கிருக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவும் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 800 பயணிகளில் 300 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 500 பயணிகள் ரயில் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் பேரிடர் மீட்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், ரயில் பயணிகள் பத்திரமாக இருப்பதாக நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், நாளை அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passanger rescue from train in sri vaikundam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->