தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் நினைவு தினம் இன்று.!!
parithimar kalaignar memorial day
பரிதிமாற் கலைஞர் :
தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரியார்.
இவர் தமிழ் மொழி மற்றும் தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். செந்தமிழ் நடையில் சுவைபட விவரிக்கும் இவரின் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள்.

தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்த மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
parithimar kalaignar memorial day