அம்மா ஜெயலலிதா காட்டிய வழி தான் எங்கள் பாதை...! -நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமியின் உறுதி
path shown by Amma Jayalalithaa our path Edappadi Palaniswamis assurance memorial day
மக்கள் மனதில் ஒலித்த “மக்களால் நான்… மக்களுக்காக நான்” என்ற முழக்கத்தின் வடிவமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 70 நாட்களாக நடைபெற்ற தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல், டிசம்பர் 5ஆம் தேதி உயிர் நீத்தார்.
இவர் மறைந்து 9 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அ.தி.மு.க. தொண்டர்களின் இதயத்தில் அவர் இன்னும் "அம்மா"வாகவே நிற்கிறார்.மேலும், ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தள பதிவில் அவருக்கு உருக்கமான புகழஞ்சலி செலுத்தினார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,"எங்களின் இதயத் தெய்வம், ‘மக்களுக்காக நான்’ என வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த நம் ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா இன்று கூட எங்கள் ஒவ்வொரு செயலின் பின்னணித் துடிப்பாக உள்ளார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கை மலர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை தாய்மையைப் போல துல்லியமாக செயல்படுத்திய அரிய அரசியல் மேதை அவர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி, ‘அமைதி–வளம்–வளர்ச்சி’ பாதையில் தமிழ்நாட்டை நடத்துவதே அம்மாவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை” என்று குறிப்பிட்டார்.
English Summary
path shown by Amma Jayalalithaa our path Edappadi Palaniswamis assurance memorial day