ஓசூர் || காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் - மகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகள் ஸ்பூர்த்தி. இவர், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற  மாணவி ஸ்பூர்த்தி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையே மாணவி ஸ்பூர்த்தி நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், மாணவியும், முத்தாலி பகுதியை சேர்ந்த சிவா என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்காததனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். இருப்பினும் மாணவி காதலை கைவிட மறுத்து விடாமல் இருந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parents murder daughter in osoor for love


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->