காவல் பணியிலும், கிக் பாக்சிங்கிலும் ராஜாவான பழனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா.! - Seithipunal
Seithipunal


தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன் போட்டியில் தமிழக அணிக்காக தங்கப்பதக்கம் வென்ற பழனி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இசக்கி ராஜா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போது ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த நிலையில், காவல்நிலையத்தில் வழக்கறிஞர் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டி, ரவுடிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து மக்களிடம் வரவேற்பை பெற்றார். 

இந்நிலையில், மிகச்சிறந்த கிக்பாக்ஸிங் வீரரான இவர், ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார். 85 முதல் 90 கிலோ பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார். 

காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கு காவல்துறையினரும், பொதுமக்களும் மனமார பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தான் பணிபுரியும் பழனி தாலுகா காவல் நிலைய சுவர்களில் " தங்களுக்கு சேவை செய்ய எங்களிடம் சிபாரிசு தேவையில்லை " என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இந்த வாசகமும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani Taluk Police Station Sub Inspector Esakki Raja Victory Kick Boxing and Champion of Champion Trophy


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal