போஸ்ட் டெலிட்! ரஜினியை அசிங்கப்படுத்திய அட்டகத்தி ரஞ்சித்! பேக் ஃபையர் ஆனதும் சம்பவம்!
Pa Ranjith Rajinikanth wish issue
தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று. ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், விஜய், கமல் உள்ளிட்ட திரைபிரபலன்களும் தங்கஜாலின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அட்டகத்தி இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவரின் வாழ்த்து பதிவில், நடிகர் ரஜினிகாந்தின் மிக மோசமான, முகம் ஒழுங்கற்ற நிலையில் இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வன்மத்துடன் பதிவிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும், "மனதில் எவ்வளவு வன்மம் இருந்தால், உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரை, உலகத்தின் பல்வேறு நாடுகளில் அறியப்பட்ட ஒரு நடிகரின் பிறந்தநாள் அன்று, அவரின் முகம் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி இப்படி ஒரு வாழ்த்தை தெரிவித்து இருப்பார் என்று பா ரஞ்சித்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் உனக்கு வாய்ப்பு தரவில்லை என்றால், நீ எல்லாம் வெளியே தெரிந்திருக்கவே மாட்டாய் என்றும் ஒரு சிலர் பா.ராஞ்சித்திற்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
இதனை உணர்ந்து கொண்ட பா ரஞ்சித், உடனடியாக அந்த போஸ்ட்டை டெலிட் செய்து விட்டு, காலா படத்தில் ரஜினிகாந்த் மாஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த பதிவின் கீழே, முந்தைய பா ரஞ்சித்தின் போஸ்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தவர்கள் பதிவிட்டு, ஒருமையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
English Summary
Pa Ranjith Rajinikanth wish issue