இபிஎஸ் மீது செல்போன் விழுந்த விவகாரம் - எம்.பி ரவீந்திரநாத் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


இன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கட்சி அலுவலக வளாகத்தில் எல்.இ.டி பதாகைகளை திறந்து வைத்தார். 

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்தது. செல்போன் வீசியவர்கள் யார் என்று விசாரித்தனர். அதில், செல்போனை வீசவில்லை. இபிஎஸ்ஸூடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது செல்போன் தவறுதலாக மேலே விழுந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் எறிந்த சம்பவத்திற்கு ஓபிஎஸ் மகனும், தேனி முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

“இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது தொலைபேசி எறிந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரிகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைவாகக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பாதுகாவல் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops son ravendranath condems cellphone feel down on eps


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->