ஓபிஎஸ் குடும்பத்தில் கொரோனா! மதுரை அப்போலோவில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

உலகையே ஆட்டைப்படைக்கும் கொரோனா தமிழகத்திலும் அதிகமாக தற்போது பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் அவற்றின் பரவல் வேகமானது அதிக அளவில் இருந்து வருகின்றது. 

தேனி மாவட்டத்தில் இன்றும் 60 பேருக்கு மேல் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை அமைச்சருமான ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தற்போது மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Brother O Raja affected Covid19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal