அண்ணாமலையை சமாதானப்படுத்த பாஜக முயற்சி!பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரும்பிய தொகுதிகள் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் போன்ற தொகுதிகளில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த தொகுதிகள் ஒதுக்கப்படாமல் கோவை வடக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதிலும் வானதி சீனிவாசன் போட்டியிடும் நிலையில், அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், அண்ணாமலையை சமாதானப்படுத்த பாஜக மேலிடம் நேரடியாக களமிறங்கியுள்ளது. அதற்காக மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் கோவையில் அண்ணாமலையை சந்தித்து பேசினார்.

சிறப்பம்சமாக, இந்த சந்திப்பு வழக்கமான அரசியல் சந்திப்பு அல்ல. அண்ணாமலை பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்திற்கே சென்ற மேக்வால், அவருடன் சேர்ந்து சில நேரம் விளையாடியதும், பின்னர் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் புகைப்படத்தை அண்ணாமலை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, “உடல் அசைவு, வியர்வை, அதிரடி—இதற்கு பேட்மிண்டனுக்கு ஈடு இல்லை. மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக மேலிடத்தின் இந்த ‘சாப்ட் டிப்ளமசி’ முயற்சி பலன் அளிக்குமா? அண்ணாமலை மீண்டும் தேர்தல் களத்திற்கு வருவாரா? என்பது அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP attempt to pacify Annamalai Union Minister goes to badminton court to find it What the background


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->