‘ஆபரேஷன் அதிமுக’..! திமுகவின் மாஸ்டர் பிளான்! மொத்தமா முடியப்போகும் அதிமுக! லிஸ்ட் போட்டுக் கொடுத்த மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


சென்னை: அடுத்த சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இழுக்கும் முயற்சியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக “ஆபரேஷன் அதிமுக” என்ற பெயரில் திட்டமிட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமையில் ஏற்பட்ட மாற்றங்கள், உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணுகுமுறையில் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை பல நிர்வாகிகளை குழப்பமடைய வைத்துள்ளன. கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததும், உள்ளூரில் செல்வாக்கு குறைந்ததும் காரணமாக, சிலர் தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த திமுகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்குள் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுகவிற்கு கொண்டு வர மாவட்ட வாரியாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் இந்தக் கடமையை திமுக தலைமை ஒப்படைத்துள்ளது.

முதல் கட்டமாக ஓ.பி.எஸ். அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை வளைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகளை இழுக்கும் பொறுப்பை அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு திமுக வழங்கியுள்ளது.

முன்னதாக டி.டி.வி. தினகரனின் அணியில் இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி. கலைராஜன், பழனியப்பன் போன்ற முக்கிய நிர்வாகிகளை திமுக தன்னுடன் இணைத்துக் கொண்டது. அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள், மாவட்ட செயலாளர் பதவிகள், எம்.பி. பதவிகள் என பல்வேறு பொறுப்புகளும் வழங்கப்பட்டன. இதே பாணியைத் தொடரும் வகையில், தற்போது ஓ.பி.எஸ். அணியை முழுமையாக திமுகவில் இணைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பிய பின், அவரது தலைமையில் பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.

 மொத்தத்தில், “ஆபரேஷன் அதிமுக” மூலம் திமுக, எதிரணியின் பலத்தை குறைத்து, தன் அரசியல் வலிமையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation AIADMK DMK master plan AIADMK is about to end MK Stalin who gave the list


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->