ஊட்டி ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு..சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
Ooty Rose Exhibition extended for 2 more days..Tourists are excited
ஊட்டி ரோஜா பூங்காவில், சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கோடை விழாவின் 3-வது நிகழ்ச்சியாக ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இந்த கண்காட்சியில் 2 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த அலங்காரங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கிறது.
ரோஜா கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று மழையை கூட பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு வந்திருந்தனர். அவர்கள் ரோஜா அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.
நிறைவு விழாவில் கண்காட்சியில் சிறப்பாக அலங்காரம் செய்திருந்த போட்டியாளர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக, ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்களில் ரோஜா கண்காட்சியினை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.
English Summary
Ooty Rose Exhibition extended for 2 more days..Tourists are excited