தமிழக மக்களே உஷார்.! உங்கள் செல்போன், கணினியை போலீஸ் பறிமுதல் செய்யும்.! இந்த தவறை இனி செய்யாதீங்க.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி தொடர்பான விவாகத்தில், தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் உட்பட பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதாக அறிவித்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழகத்தில் இருந்து தற்போது முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தின்படி, 

* ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10000 அபராதம்.
* 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. 

* தடையை மீறி விளையாடினால் ரூ.5000 அபராதம், 
* 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். 

* பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online rummy ban law info


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal