சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் உடல் சிதறி பலி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கடம்பூர் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த தனசேகர் கடந்த எட்டு ஆண்டுகளாக தனது விவசாய நிலத்தில் மணி பயர்ஸ் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சிறிது சிறிதாக நான்கு கட்டிடங்களை கட்டி அதில் பட்டாசு செய்யும் வேலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளார் தனசேகர். 

இந்த நிலையில் நேற்று கடம்பூர் மேற்கு காடு பகுதி அருகே உள்ள கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் பட்டாசு ஆலைக்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்த நிலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. 

இந்த சம்பவத்தில் அந்த கட்டிடம் தரைமட்டமான நிலையில் சம்பவ இடத்திலேயே ராஜரத்தினம் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் பணியில் இருந்த இரு பெண்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பெரித பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தை கண்டித்து ராஜமாணிக்கத்தின் உறவினர்கள் ஆத்தூர் கடம்பூர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ஆத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயர்ந்த சம்பவம் ஆத்தூர் பகுதிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person died in firecrack accident in Salem


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->