ஒரே நாடு, ஒரே தேர்தல்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் நாடு முழுவதும் ஒரே கட்டமாக அணைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும், இந்த மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரும்  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு, ஒரே நாடு- ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு ஐஎன்டிஐஏ கூட்டணியும் இன்று நடக்க உள்ள கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சிறப்பு குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one nation one election new announce central govt


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->