'பாகிஸ்தான் சின்ன பசங்க கிட்ட கூட அரசியலை புகுத்துறாங்க'; கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரே ஒரு நாளில் தொடங்கவுள்ளது. இதில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கூறியுள்ளது. இந்த விசித்திர முடிவை சுற்றி பல விவாதங்கள் நடந்து வருகின்றன. 

பல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தானின் முடிவு குறித்து பேசிவருகின்றனர். அத்துடன், லீக் போட்டியை தவறவிட்டால் நாக் அவுட் போட்டியில் இந்தியா உடன் விளையாட நேர்ந்தால் அப்போதும் பாகிஸ்தான் விளையாடாதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர், ''டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. நாங்கள் கவனமாக ஆலோசித்த பின்னரே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது ஒரு பொருத்தமான முடிவுதான்'' என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் சின்ன பசங்க கிட்ட கூட அரசியலை புகுத்துவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை பல அணிகள் வேறு நாட்டிற்கு வந்து விளையாட மாட்டோம் என கூறியிருக்கிறார்கள். அதாவது, ஆஸ்திரேலியா கூட, ஒரு முறை இலங்கைக்கு வந்து விளையாட முடியாது என கூறியது, ஆனால், ஒரு தொடரில் ஒரு அணிக்கு எதிராக மட்டும் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருப்பது இதுதான் முதல்முறை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், யு19 உலகக்கோப்பையில் கூட இந்தியாவிற்கு எதிராக 33 ஓவர்களில் இலக்கை எட்டியிருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு சென்றிருக்கும். ஆனாலும், சமீபத்தில் கூட துபாயில் நடந்த ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருந்தனர்.

ஆனால், அந்த சின்ன பசங்க கிட்ட என்ன இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கப்பட்டிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. நீ அரையிறுதிக்கு கூட போக வேண்டாம், ஆனால் இந்தியாவிடம் தோற்க கூடாது என கூறியிருப்பார்கள்.

இந்த விசயத்தில் நான் பிசிசிஐ-க்கு பாராட்டுகளை கொடுக்க விரும்புகிறேன். இதைச் சொன்னால் பலர் அண்ணா நீங்க பிசிசிஐ-க்கு முட்டு கொடுக்கிறீங்க, அணை கட்டுறீங்கனு சொல்லுவாங்க. ஆனால், பிசிசிஐ ஒருமுறை கூட விளையாட்டில் அரசியலை கொண்டு வந்தது கிடையாது. எங்களுக்கு எந்த அழுத்தமும் இருந்தது கிடையாது. பிசிசிஐ எப்போதும் அரசியலையும், விளையாட்டையும் தனி தனியாக பார்த்துள்ளது என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian cricketer Ravichandran Ashwin criticized Pakistan saying they are even injecting politics into young children


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->