மீண்டும் பவாரியா கேங்? தனியாக வசித்து வந்த மூதாட்டி! குறிவைத்து கொலை,கொள்ளை!
Old women living alone Targeted killing and robbery
திருப்பத்தூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரும்பத்தூர் மாவட்டம் நத்தம் ஏரிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா. கணவர் கோபால் இறந்து விட்டதால் அதே பகுதியில் உள்ள வீட்டில் அனுமக்கா தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மூதாட்டி அனுமக்கா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த கம்பல், மூக்குத்தி, கால் வலயம் உள்ளிட்ட நகைகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. மர்மநபர்கள் வீடு புகுந்து அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்து உடனடியாக இது குறித்து அப்போது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Old women living alone Targeted killing and robbery