ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை.. தலை துண்டாகி உயிரிழப்பு.!
Old man suicide train in thirunelveli
ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த முதியவரின் பையில் முத்து, சென்னை என்று டெய்லர் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர் கட்டம் போட்ட சட்டையும், கிளியும் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
Old man suicide train in thirunelveli