சப்-இன்ஸ்பெக்டரை திட்டி தாக்கிய ஏட்டு...உடனடி சஸ்பென்ஷன் வழங்கி உத்தரவு...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அரியலூரில் ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சியை சேர்ந்த 40 வயதான விஜயகுமார் என்பவர், கடலூரில்  ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.சொத்து பிரச்சினை காரணமாக, தனது மகன் விஜயகுமார் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று அவரது தாய் மலர்கொடி, ஆண்டிமடம் காவலில் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து சிறப்பு துணை ஆய்வாளர் ரமேஷ், விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்தார்.கடந்த மாதம் 28-ந்தேதி விநாயகர் சிலை பாதுகாப்பு பணியிலிருந்த விஜயகுமார் திடீரென ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு சென்று, அங்கு பணியில் இருந்த ரமேசிடம் ஆபாசமாக திட்டி, சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும், காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் நடந்ததற்காக, விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்ய கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

officer who insulted and attacked sub inspector was immediately suspended What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->