பால் பண்ணையில் பெண் உயிரிழந்த விவகாரம் - அதிகாரி இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே காக்களூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, நாள் தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அதன் படி தரம் பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால் இயந்திரத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட்டில் வெளியே வரும் போது, அதனை அடுக்கும் பணியில், தற்காலிக ஊழியரான உமாராணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, உமாராணி அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவும், அவரது தலைமுடியும் எதிர்பாராதவிதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதால் உமாராணி தலை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த பொறுப்பாளர் அஜித்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா, கண்காணிப்பாளர் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர் சுரேஷ், அருண்குமார் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

officer suspend for aavin staff death issue in thiruvallur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->