மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற செவிலியர்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


மகளுடன் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு திருமணமாகி சுமதி  என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவதன்று, மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டார்.

அவர் வீடு திரும்பி வந்து பார்க்கும் போது, சுமதி மற்றும் அவர்களது மகள் சுபா ராஜேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்தார் என்பது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nurse Attempt Suicide in Thirunelveli


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->