ரீல்ஸ் மோகம்; 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய 05 சிறுவர்கள்; ஒருவர் உயிரிழப்பு; இருவரை மீட்டெடுத்த ஹெலிகாப்டர்..!
One of Five Boys Who Climbed a 60 Foot Water Tank to Film Reels Dies
ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஐந்து சிறுவர்கள் ஏரிய நிலையில், ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில் நேற்று (சனிக்கிழமை) மதியம், ரீல்ஸ் மோகத்தால் 05 சிறுவர்கள் 60 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறியுள்ளனர். அவர்கள் உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது, அவர்களின் பாரம் தாங்காமல் ஏணி உடைந்ததில், மூன்று சிறுவர்கள் சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.
இதன் போது 13 வயதான சித்தார்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீர் தொட்டியின் உச்சியில் சிக்கிக் கொண்ட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் முயற்சிகளில் அவர்கள் பின்னடைவுகளைச் சந்தித்த நிலையில், நிலைமை மோசமடைந்துள்ளது. பின்னர் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளது.
அதன்படி, இந்த மீட்புப் பணிக்காக ஒரு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. சுமார் 16 மணி நேர முயற்சிக்குப் பிறகு, இன்று அதிகாலை 05:20 மணியளவில், தண்ணீர் தொட்டியின் மேல் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சிவஷரணப்பா ஜி.என் மற்றும் எஸ்எஸ்பி அபிஷேக் மகாஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு முழுவதும் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
One of Five Boys Who Climbed a 60 Foot Water Tank to Film Reels Dies