'ECINET' மொபைல் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள்; தேர்தல் ஆணையம் ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.  நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்து முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அத்துடன், அதிமுக வெற்றி பெறும் எனவும், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி தமிழக தேர்தல் களத்தில் சூடுபிடிக்க வைத்துள்ளன.

நாளை தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும், வெற்றிப்பெறப்போவது யார் என்ற கேவலிக்கு விடை தேடி தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.

அதன்படி, நாளை காலை 08 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும், பின்னர், வாக்குகள் எண்ணப்பட்ட தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். பிற்பகலில் யார் வெற்றிக்கு அருகில் இருக்கிறார்கள் என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும். 

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை இலகுவில் தெரிந்துக்கொள்ளும் வகையில், தேர்தல் ஆணையம் மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை, தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் மட்டுமே வெளியான நிலையில், 'ECINET' மொபைல் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கப்படவிருக்கிறது. இந்த செயலி மூலம், மாநில வாரியாக மற்றும் தொகுத் வாரியாக முன்னிலை நிலவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vote Counting Updates via the ECINET Mobile App


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->