நேரத்தின் அடிப்படையில் மின் கட்டணம்; பீகார் அரசு புதிய நடைமுறை..!
Bihar Government Introduces New System to Determine Electricity Tariffs Based on Time
மின்சார தேவையில் சமநிலையைக் கொண்டுவர சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை தங்கள் மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக பீஹார் அரசு தெரிவித்துள்ளது.
அதாவது நேரத்தின் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கும் புதிய நடைமுறை பீகாரில் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, ஒருநாளின் 24 மணி நேரம் 03 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காலை 09 மணி முதல் மாலை 05 வரை தேவை குறைவான நேரம் என்றும், மாலை 05 முதல் இரவு 11 மணி வரை தேவை மிகுந்த நேரம் என்றும், இரவு 11 முதல் காலை0 5 வரை சாதாரண நேரம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், மின் கட்டணம் தேவை மிகுந்த நேரத்திற்கு 08 ரூபாய் 16 காசாகவும், தேவை குறைந்த நேரத்திற்கு 05 ரூபாய் 94 காசாகவும் சாதாரண நேரத்தில் 07 ரூபாய் 42 காசாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும், மின்விசிறிகள், குளிரூட்டிகள் மற்றும் விளக்குகள் போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், வழக்கமாக மாலை நேரங்களில் தேவை கடுமையாக உயர்கிறது என்றும், இதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் அதிக கட்டணங்கள் விதிக்க வேண்டியுள்ளது என்றும் பீஹார் அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Bihar Government Introduces New System to Determine Electricity Tariffs Based on Time