டெல்லியில் 30 வயது நீதிபதி தூக்கிட்டு தற்கொலை; மனைவி மற்றும் குடும்பத்தினர் டார்ச்சர்; தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


30 வயதான நீதிபதி ஒருவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிவந்தவர் நீதிபதி அமன் குமார் சர்மா. இவருக்கு திருமணமாகி டெல்லி சஃப்தர்ஜங் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவ தினமாக நேற்று பிற்பகல் 02 மணி அளவில் சஃப்தர்ஜங் என்கிளேவ் காவல்நிலையத்திற்கு நீதிபதியான அமன் குமார் சர்மா, தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார், சஃப்தர்ஜங் என்கிளேவ் காவல்துறையினர் நீதிபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர் வீட்டின் குளியறையில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

உடனடியாக அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதன் போது நீதிபதி, அமன் குமார் சர்மா, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தலால் தான் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நீதிபதி அமன் குமார் சர்மாவின் சகோதரியின் மாமனார் இது குறித்து கூறுகையில்; ''சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அமன் குமார் சர்மாவை கொண்டு சென்றுள்ளதாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரவு சுமார் 10 மணியளவில், அமன் அவரைத் தொடர்புகொண்டு, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தொடர்ந்து வாழ்வது தனக்குக் கடினமாகிவிட்டதாகவும் கூறியுள்ளதாக அவரது தந்தை காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி தெரியவந்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

the 30 year old wife of a judge commits suicide by hanging due to torture by her family members


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->